ஈரானை தனிமைப்படுத்த இஸ்ரேல் தீவிரம்!

புதன் மே 09, 2018

சமீபகாலமாக சிரியாவில் ஈரான் செலுத்திவரும் ஆதிக்கம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடிக்கடி தொலைபேசி மூலம் ரஷியா அதிபர் புதினை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்திவந்த நிலையில், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜெருசலேம் நகரிலிருந்து மாஸ்கோ புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெஞ்சமின் நேதன்யாகுவும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

'சிரியாவில் தற்பொழுது உள்ள சூழ்நிலையின் படி ரஷியா-இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது. எனக்கும் புதினுக்கும் இடையிலான சந்திப்புகள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகவே இருந்துள்ளன. அவ்வகையில், இந்த சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் ஆனதுதான்' என அவர் தெரிவித்தார்.