ஈரான் சாபாநாயகர் அலி லாரிஜனி சிறிலங்கா பயணம்!

திங்கள் ஏப்ரல் 16, 2018

ஈரான் நாடாளுமன்ற சாபாநாயகர் அலி லாரிஜனி (Ali Larijani) இந்த வாரமளவில் சிறிலங்காவிற்கு  விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அவர் சிறிலங்காவிற்கு வருகைத் தரவுள்ளார். சிறிலங்காவிற்கு  வருகைத்தரும், அவர் இங்கு பல உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் உலக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சிரியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள், அதன் நிலைமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.