ஈரான் முன்னாள் அதிபர் காலமானார்

திங்கள் சனவரி 09, 2017

ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி உடல் நலக் குறைவால் காலமானார்.ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக தலைநகர் தெஹ்ரானின் வடக்கு பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் நேற்று காலை அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று (8)  பிரிந்தது.

ரஃப்சன்ஜனி ஈரான் நாட்டு அதிபராக 1989 முதல் 1997 வரை பதவி வகித்தார். ஈரான் நாட்டு அரசியலில் முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு தருணங்களில் அரசியல் தளத்தில் கிங் மேக்கராக இருந்தவர். 

மாரடைப்பு காரணமாக ரஃப்சன்ஜனி உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மருத்துவனையில் ரஃப்சன்ஜனி உயிரிழந்ததை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.