ஈருருளிப்பயணம் ஜெனிவா நகரை அண்மித்தது

திங்கள் மார்ச் 14, 2016

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட  ஈருருளிப்பயணம் கடந்த 14 நாட்களாக பல்வேறு நாடுகளை ஊடறுத்து இன்று மாலை ஜெனிவா நகரை அண்மித்தது . கடும் குளிரிலும் தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தமது உறுதியான பயணத்தை மேற்கொண்டனர் .

தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் அனந்தி சசிதரன் அவர்கள் இன்றைய நாளில் இரு  மனிதநேயசெயற்பாட்டாளர்களையும் சந்தித்து தனது தோழமையை செலுத்தினார். நாளை காலை ஈருருளிப்பயணம்  ஜெனிவாவில் நடைபெறும் பேரணியில் இணைந்துகொண்டு ஐநா திடல் நோக்கி பயணிக்கும் .