ஈருருளிப் பயணம் - Vitry le Francois நகரைச் சென்றடைந்தது!

Friday September 07, 2018

பிரான்சில் இருந்தது ஜெனிவா நோக்கிய மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் 06.09.2018 வியாழக்கிழமை நான்காவது நாளில் Vitry le Francois  நகரைச் சென்றடைந்தது.

சுமார் 70 கிலோமீற்றர் கடும் மலைப்பாங்கான பாதைகளுக்கு ஊடாகப் பயணம் செய்து Vitry le Franois  நகரை இன்று மாலை சென்றடைந்து அங்கு நகரசபை நகரபிதாவிற்கான கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணத்தின் போது பல வெளிநாட்டவர்கள் குறித்த ஈருருளிப் பயணத்தின் நோக்கம் அறிந்து, ஆச்சரியமடைந்ததுடன் பயணம் வெற்றியளிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.