ஈழத்தமிழ் சிறுமியின் கண்ணில் தெரியுதடி கவிதை நூல் வெளியீட்டு விழா!

March 06, 2018

இலண்டனில் முதன்முதலாக ஈழத்தமிழ் சிறுமி  அனன்யா ரஜீந்திரகுமார் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு பிரமுகர்கள் அறிஞர்கள் கலந்து இவருக்கு வாழ்த்த இருக்கின்றார்கள். பிரித்தானியாவின் வட பகுதி நகரான யோர்க்ஷாயார், ஹலீபாஸ் நகரில் வசித்துவரும் அனன்யா ரஜீந்திரகுமார் மிகவும் இளம்வயதில் பல்துறை ஆற்றல் கொண்டவராக விளங்குகின்றார். 

எட்டு வயதில் கவிதை, பேச்சு, பாடல், இசை மற்றும் கலைகள் என இவரது ஆற்றல் விரிந்துகொண்டு செல்கின்றது.நான்காம் ஆண்டு கல்வி பயிலும்  அனன்யாவின் பெற்றோர்கள் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து பிரித்தானியா வந்து குடியேறியுள்ளனர்.

அவரது தந்தையான திரு ரஜீந்திரகுமார் அவர்கள் நிகழ்வு பற்றி 

பேசியபோது, மிகவும் உற்சாகமாக நிகழ்வுக்கான ஒழுங்குகள் நடைபெறுவதாகவும், தமது மகளின் எட்டாவது வயதில் அவரது கவிதை நூல் வெளிவருவது மகிழ்வை தருவதாகவும் குறிப்பிட்டார்.அத்துடன் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அன்புடன் அழைப்பதாகவும் தெரிவித்தார்.

செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம