ஈழத்தமிழ் பெண்களுக்கான நீதி கோரும் கவனயீர்ப்பு -யேர்மன்

புதன் மார்ச் 09, 2016

யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும்  ஈழத்தமிழ் பெண்களுக்கு  நீதி கோருவதுக்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள்.இப் பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து கொண்டனர் .இப்  போராட்டத்தில் ஈழத்தமிழ் பெண்கள் சார்பாக உரையாற்றியவர் , இன்றும்  தாயகத்தில் தமிழ் பெண்கள் சொல்லனா துன்பத்திலும் , சிங்கள ராணுவத்தின் பாலியல் கொடுமைகளுக்கும் முகம் கொடுத்து வாழ்கின்றனர் என்பதையும் , தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு தமிழீழம் ஒன்றே தீர்வாக அமையும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு உலகம் எங்கும் அடக்குமுறைக்குள் வாழும் பெண்களுக்கு தமிழ் பெண்கள் சார்பாக தமது தோழமையையும் தெரிவித்தார். அத்தோடு இப் பேரணியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் வகையில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.