ஈழத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவுச் சின்னம்

சனி மார்ச் 12, 2016

ஈழப் போரில் உயிரிழந்த தமிழர்களை  நினைவுகூரும் வகையில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று அவுஸ்திரேலியா, மெல்பேர்ணிலுள்ள Springvale மயானத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஈழத்திலும், தமிழகத்திலும், உலகத்தின் மற்றைய பகுதிகளிலும் எமது இன விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த எம் இனத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து மெல்பேர்ணில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த தூபியானது தமிழ் உணர்வாளர்களின் ஒரு புதிய முயற்ச்சியாக கருதப்படுகின்றது.

அவுஸ்திரேலியா நாட்டில் ஈழப்  போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது நினைவுத் தூபி இதுவாகும்.  உலகில் உள்ள பெரிய மயானங்களில் ஒன்றான சிட்னி மயானத்தில் ஒன்றும், இது இரண்டாவது தூபி மெல்பேர்ணிலும் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.