ஈழத்துத் திறமைகள் - 22.12.2018

வியாழன் டிசம்பர் 06, 2018

எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே  "ஈழத்துத் திறமைகள்" (Tamil Eelam's Got Talent) ஆகும். இந் நிகழ்வு வருடந்தோறும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 

6வது முறையான இவ்வருடம் Witten (NRW) நகரில் இந்நிகழ்ச்சி  22.12.2018 அன்று நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் நடனம், பாடல், விகடம் (mimicry) போன்ற பல்வேறு நிகழ்வுகளை செய்து இளையோர்கள் தங்களது  திறமைகளை வெளிக்கொண்டு வரமுடியும். 

இந் நிகழ்வின் மூலம் பல பிரபலமான கலைஞர்கள் உருவாகியுள்ளார்கள். இந் நிகழ்வு  NRW மாநிலத்தில் நடைபெற்றாலும் இதன் பார்வையாளர் மற்றும்  போட்டியாளர் யேர்மனியின் பல பாகங்களில் இருந்தும் வருகை தருவது குறிப்பிடத்தக்கதாகும்.

a