ஈழ அகதிகளை இந்தோனேசியா கொண்டு செல்ல இலஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா

வெள்ளி டிசம்பர் 04, 2015

ஈழ அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து கடல்மார்க்கமாக இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, தமக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் கையூட்டல் வழங்கியமையை, இந்தோனேசிய படகோட்டி ஒருவர் ஒப்பு கொண்டுள்ளார்.கடந்த மே மாதம் ஈழ அகதிகள் உள்ளிட்ட 65 பேர் படகு மூலம் நியுசிலாந்து செல்லும் வழியில், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, அந்த படகின் தலைமை படகோட்டிக்கும் ஏனைய உதவியாளர்களுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக வழங்கியுள்ளனர். இதனை நீதிமன்றத்தில் வைத்து, குறித்த படகோட்டி ஒப்பு கொண்டுள்ளார்.அவர்களுக்கு எதிராக ஆட்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் நிறைவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு தலா ஐந்து தொடக்கம் 15 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.