ஈஸ்டர் வாழ்த்து - வைகோ

April 15, 2017

இன்று காலை புழல் சிறையில் தம்மைச் சந்தித்த செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்கள் மூலம், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்த ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து.

கொல்கதாவில் சிலுவையில் அறையப்பட்டபோது, “பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று கூறிய கிறிஸ்து இயேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததையே ‘ஈஸ்டர் பண்டிகை’ நாளாகக் கிறித்துவப் பெருமக்கள் உலகெங்கும் கொண்டாடுகிறார்கள்.

சக மனிதர்களை அன்பால் நேசிக்கச் சொன்னார் இயேசுநாதர். மனிதநேயமும், சகோதரத்துவமும் தமிழகத்தில் தழைக்க வேண்டும். துயரங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபட்டு தமிழக மக்களும் உலகுவாழ் தமிழர்களும் மகிழ்வுடன் வாழும் நிலை உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  வைகோ

செய்திகள்