உணவு நஞ்சானதில் 100 ஊழியர்கள் வைத்தியசாலையில்!

ஒக்டோபர் 12, 2017

தலவத்து ஓயா, ஹரகமையில் காலை நேர உணவு விஷமானதில் தொழிலாளர்கள் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹரகமையில் இயங்கிவரும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) காலை, ஊழியர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. 

உணவு உட்கொண்ட சிறிது நேரத்தில் பலர் வாந்தியெடுக்க ஆரம்பித்தனர். இன்னும் சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகமும் ஏனைய ஊழியர்களும், பாதிக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக கண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகளுக்காக அனுமதித்தனர்.

ஊழியர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

செய்திகள்
திங்கள் ஒக்டோபர் 23, 2017

அம்பலன்தோட்டை - வாதுருப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

திங்கள் ஒக்டோபர் 23, 2017

கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அரசின் அசமந்தச் செயற்பாட்டுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு...

திங்கள் ஒக்டோபர் 23, 2017

சிங்கள அரசின் காணி பறிப்பு நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வது ஏன்? சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி