உண்ணாவிரத கைதிகளுக்கு ஆஸ்திரேலியா பசுமைக் கட்சி செனட்டரின்ஆழ்ந்த கரிசனை

வியாழன் நவம்பர் 12, 2015

தமது விடுதலையை கோரி மீண்டும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து உள்ள அரசியல் கைதிகள் இம்முறை தாம் சாகும் வரை போராடுவோம் என அறிவித்துள்ளார்கள் , இது தொடர்பாக ஆஸ்திரேலியா பசுமைக் கட்சி செனட்டர்  Lee Rhiannon  அவர்கள் தமது ஆழ்ந்த கரிசனையை தெரிவித்துள்ளார் .

செனட்டர்  Lee Rhiannon  தொடர்ந்து கூறுகையில்..... 

சர்வதேச சமூகமும் , பல நாடுகளில் இருந்து ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும்  மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியுள்ளார்கள் . சமநேரத்தில் இப்போது அது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும்  மறக்கவில்லை என்பது  முக்கியமானது. நாம் அவர்களுக்கும்  அதே போல் அவர்களின் குடும்பங்களுக்கும் கடமைப்பட்டிருக்கின்றோம் .