உதயன் பத்திரிகை மீது விவசாய அமைச்சர் மானநஷ்ட வழக்கு!

செப்டம்பர் 20, 2017

வடக்கு மாகாணத்தில் வெளிவரும் உதயன் நாளிதழ் நிறுவனத்திடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசனே தராகி சிவராம் படுகொலையைச் செய்தவர் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் விவசாய அமைச்சர் போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர் எனவும் செய்தி வெளியிட்டிருந்தது.

இக்காரணங்களைக் குறிப்பிட்டு, இவ்விவகாரங்களில் தன்னைக் குறிப்பிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக, வடக்கு விவசாய அமைச்சரின் சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 30 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபா பணத்தினைச் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள்
வெள்ளி ஒக்டோபர் 20, 2017

சிறீலங்காவில் அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

சிறீலங்காப் படைககளின்  பல பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 7 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள படைத் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது