உதயம் சர்க்யூட் எழுத்துரு

செவ்வாய் ஜூலை 17, 2018

ஒரு சில எழுத்துகளை மாற்றி இலட்சினையாக உருவாக்கி இருக்கிறேன். எழுத்துகள் முழுவதையும் குறிப்பிட்ட அளவுகோலுடன் எழுத்துருக்களாக மாற்றியதில்லை. ஆதிநாதன் பிராமி / தமிழி எழுத்துரு வரைய சந்தர்ப்பம் கிடைத்து வெளியிட்டோம். இதில் என் பங்கு வரைபட உதவி மட்டுமே.

மதன் கார்க்கி கேள்விப்பட்டு அவரின் புது எழுத்துருவை வடிவமைக்க கேட்டார். வரைவதில் இருந்த ஆர்வம் எழுத்துரு ஸ்கிரிப்ட்டில் இல்லை இருந்தும் அவரின் எழுத்துரு உருவாக்க படிக்க ஆரம்பித்தேன் மதனும் உதவினார், கொஞ்சம் பிடிப்பட்டதும் எழுத்துருவை உருவாக்கினேன்.

தொழில்முறை டிசைனராக இருப்பதால் நிறைய படங்கள், எழுத்துருக்களை இணைய வழி தேடுவேன். ஆங்கில எழுத்துக்களில் அதிகமான எழுத்துரு நிறைய வடிவங்களில் இருக்கும் தமிழில் இது போல் உருவாக்க தோன்றியது. எந்த மாதிரி வடிவங்கள் எல்லாம் தேவை இருக்கிறது எது மாதிரியெல்லாம் உருவாக்கலாம் என திட்டமிடலுக்கு பின் களம் இறங்கினேன். பொதுவாக நான் ஒரு வேலையை ஆரம்பிக்கும் முன், அதன் வேலை சார்ந்து அதன் தொடர்ச்சி ( sequence ) இருக்குமாறு உருவாக்குவேன்.

முதலில் அதிகம் பழக்கப்பட்ட கோலத்தையே எழுத்துருவாக மாற்ற முயற்சித்தேன். ஒரே மாதிரி வடிவங்களுக்குள் அடக்க நிறைய தேடல்கள், நிறைய மாதிரிகள் வரைந்து குறிப்பிட்ட ஒரே மாதிரி வடிவமாக்க கிட்டதட்ட ஒன்றரை வருட உழைப்பு இருக்கிறது. இந்த எழுத்துரு கடந்த ஏப்ரல்லில் வெளியீட்டேன்.

கணினி + தமிழ் / டிஜிட்டல் தமிழ் என பொருள் பொதிந்து எழுத்துருவாக்கலாம் அதற்க்கு முதலில் சர்க்யூட் வடிவ எழுத்து கொண்டு வர திட்டமிட்டு வரைய ஆரம்பித்தேன். 

எனக்கு எழுத்துரு மீது ஆக்கமும் ஊக்கமும் தந்து மேலும் எனக்கு எழுத்துரு வேலைகள் தந்த மதன் கார்க்கியின் கையால் வெளியீட கேட்டேன். மதனும் அவரின் அலுவலுக்கு இடையில் வெளியீட்டார். அவர்க்கு என் நன்றி.

இந்த எழுத்துரு உருவாக உதவிய நண்பர்கள் செல்வ முரளி, வினோத் ராஜன், ஸ்ரீனிவாசன்க்கு நன்றிகள் பல.

இந்த எழுத்துவை தொடர்ந்து கோலங்கள், சர்க்யூட், இலை, பூ, செடி, கொடி, மரம், கோவில் என இந்த வருட இறுதிக்குள் வெளியீட இருக்கிறேன்.

தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை சர்க்யூட் வடிவில் எழுத்துருவாக (Font) உருவாக்கி உள்ளேன். Full Color and Outline Stoke என்று இரு தனி எழுத்துருவாக கொண்டு வந்துள்ளேன்.

http://fonts.udhayam.in/ என்ற இணையதளத்தில் இந்த எழுத்துரு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

Enter your Own Text என்ற கட்டத்தில் நீங்கள் விருப்பப்பட்ட தமிழ் ஆங்கில சொற்களைப் பதிந்தால் அவை அச்சொற்களை எழுத்துருக்களாக கீழே மாற்றிக்காட்டும். அதைப் படங்களாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

எழுத்துரு ”யுனிகோட்” முறையிலேயே உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த எழுத்துருவை பதிவிறக்கி, காப்பி எடுத்து விண்டோஸ் கணினியாக இருந்தால் ஃபாண்ட் போல்டரில் (Font Folder) C:\Windows\Fonts\ என சேமிக்கவும்.

உங்கள் கோப்புகளை தட்டச்ச Word, Notepad, Coreldraw, Photoshop போன்ற மென்பொருளில் யுனிகோட் முறையில் தட்டச்சி, பின் இந்த Fontக்கு மாற்றினால் நீங்கள் எழுதியற்றை இந்த ”சர்க்யூட் எழுத்துரு”வில் காணலாம்.

பொதுவாக இந்த வகை எழுத்துருக்களை தலைப்புகளுக்கும் இலட்சினைக்கும் (Logo) உபயோகப்படுத்தலாம்.

அரும்செயல் உதயன்