உயிர் பிரியும் வேளைவரை உறுதியின் இலக்கணமாய் வாழ்ந்திருந்தார் மாரியம்மாள்!

சனி நவம்பர் 07, 2015

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழீழ விடுதலையில் மாறா பற்றுறுதியுடன் செயலாற்றி வருபவருமான வைகோ அவர்களின் அன்புத் தாயார் மரணமடைந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் வைகோ அவர்களின் அரசியல் வாழ்வில் பெரும் தடைக்கல்லாக உருவெடுத்து நின்ற போதிலும் அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்களின் ஆதரவே அவரின் பெரும் பலமாக விளங்கியது என்பதை நாம் அறிவோம். வைகோ உள்ளிட்ட அவரது பிள்ளைகளின் பொது வாழ்வின் ஆதாரமாய் விளங்கிய அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

உயிர் பிரியும் வேளைவரை தள்ளாத வயதிலும் தளர்ந்துவிடாத உறுதியுடன் உறுதியின் இலக்கணமாக அன்புத் தாயார் மாரியம்மாள் வாழ்ந்தமைக்கு கலிங்கப்பட்டி மண்ணே சாட்சியாகும். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மீது பேரன்பு கொண்டு விளங்கியதுடன் தமிழீழ விடுதலை மீதும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் அன்புத் தாயார் மாரியம்மாள் அவர்கள்.

அன்னாரின் ஆத்மா இறைவனடி சேர்ந்து அமைதியடையவும், அவரது பிரிவால் மீழாத் துயருற்றிருக்கும் வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


'அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை' 

சுவிஸ் ஈழத்தமிழரவை  - சுவிஸ் 
நோர்வே ஈழத்தமிழர் அவை  - நோர்வே 
கனேடிய தமிழர் தேசிய அவை - கனடா 
இத்தாலி ஈழத்தமிழரவை - இத்தாலி 
பிரான்ஸ் தமிழர் பேரவை - பிரான்ஸ்
சுவீடன் தமிழர் தேசிய அவை -  சுவீடன் 
தமிழர் நீதிக்கான அமைப்பு - அவுஸ்திரேலியா
பெல்ஜியம்  தமிழர் தேசிய அவை - பெல்ஜியம்
பின்லாந்து தமிழர் பேரவை - பின்லாந்து
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் – டென்மார்க்
நெதர்லாந்து தமிழர் அவை  - நெதர்லாந்து 
நியூசீலந்து தமிழர் தேசிய அவை - நியூசீலந்து
தமிழர் இன அழிப்புக்கு  எதிரான கூட்டமைப்பு - மொரிசியஸ்
யேர்மன்  ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி 

கீழே அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது