உருகாத ஐஸ்க்ரீம் - ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு

செப்டம்பர் 24, 2017

ஐஸ்க்ரீம் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பத்தக்க ஒன்று. ஆனால் இந்த ஐஸ்க்ரீமை வாங்கியவுடன் அது உருகும் முன் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வேஸ்ட் ஆகிவிடும். இந்த நிலையில் இனிமேல் இந்த கவலை இல்லை.

ஐஸ்க்ரீம் உருகாத வகையில் ஜப்பான் விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பை செய்துள்ளனர். ஸ்ட்ராபெரி என்ற பழத்தில் இருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் ( polyphenol ) என்ற திரவம், ஐஸ்க்ரீமில் கலந்தால் ஐஸ்க்ரீம் உருகாது என்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சோதனையின் போது இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. பாலிஃபினல் கலந்த ஐஸ்க்ரீமை ஹேர் ட்ரையர், சூடான காற்று ஆகியவற்றில் சுமார் 5 நிமிடம் வைத்தும் ஐஸ்க்ரீமின் உருகாமலும் அதன் வடிவம் மாறாமலும் இருந்துள்ளதாம்.

வெண்ணிலா, சாக்லெட், ஸ்ட்ராபெரி என்று மூன்று சுவைகளில் இந்த உருகாத ஐஸ்க்ரீம்களை கண்டுபிடித்துள்ளனர்.

செய்திகள்
திங்கள் நவம்பர் 13, 2017

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாஸ் 76 மொழிகளில் பாடியது உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது. அந்த சாதனையை முறியடித்து 85 மொழிகளில் பாடல் பாடி உலக சாதனை படைக்க வேண்டும் என்பது சுசேதா சதீஷின் ஆசை.

வியாழன் ஒக்டோபர் 19, 2017

பதட்டம் என்பது என்ன? இத்தகையப் பாதிப்பு ஏற்படும் பொழுது பாதிக்கப்பட்ட நபர் என்ன செய்ய வேண்டும்?