உலகம் முழுவதும் போரினால் 40 மில்லியன் மக்கள் புலம்பெயர்வு

வியாழன் மே 12, 2016

சர்வதேச அளவில் புலம்பெயர்ந்துள்ள மக்களின் விவரங்கள் குறித்த ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஜெனிவாவை மையமாக கொண்டு செயல்படும் புலம் பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் அதனை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, உலகம் முழுவதும் போரினால் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை 40.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. எப்பொழுது இல்லாத அளவிற்கு சென்ற ஆண்டு தான் அதிக அளவில் புலம்பெயர்வு நடைபெற்றுள்ளது. 

2015-ம் ஆண்டில் மட்டும் 8.6 மில்லியன் மக்கள் போர் பதற்றம் காரணமாக புலம்பெயர்ந்துள்ளனர். அதில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மட்டும் 4.8 மில்லியன் பேர். 

19.2 மில்லியன் மக்கள் பேரழிவு காரணமாக புலம்பெயர்ந்துள்ளனர். இந்தியா, சீனா மற்றும் நேபாளம் முறையே 3.7 மில்லியன், 3.6 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். 

போர் பதற்றம் மற்றும் இயற்கை பேரழிவு காரணமாக மட்டும் கடந்த ஆண்டில் 27.8 மில்லியன் மக்கள் மொத்தமாக புலம்பெயர்ந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.