உலகின் உயரமான மனிதருடன் புகைப்படம் எடுத்த மிக குள்ளமான பெண்!

January 30, 2018

உலகில் மிக உயரமான மனிதரான சுல்தான் கோசனுடன் இந்தியாவைச் சேர்ந்த உலகின் மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்ஜே எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஜோதி அம்ஜே என்ற 25 வயது இளம்பெண் உலகின் மிக குள்ளமான பெண்ணான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். இவரின் உயரம் 62.8 செ.மீ. ஆகும். 

இந்நிலையில், ஜோதி எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் மிக உயரமான ஆணான சுல்தான் கோசனை (துருக்கி) நேரில் சந்தித்து பேசினார். எகிப்து சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது ஜோதி மற்றும் சுல்தான் சேர்ந்து நிற்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

செய்திகள்
செவ்வாய் February 13, 2018

ஐக்கிய நாடுகள் சபையானது 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் திகதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.