உலகின் நீண்ட தூரம் செல்லும் விமானம்

செவ்வாய் பெப்ரவரி 07, 2017

புவியின் சுற்றளவுக் கணக்கின் படி, கத்தார் - நியூசிலாந்து இடையே நீண்ட தூரம் செல்லும் செல்லும் விமானம் நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் நேற்று(6)  தரையிறங்கியது.

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இடையில் எங்கும் தரையிறங்காமல் நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்து செல்லும், விமானம் இயக்கப்படும் என கடந்தாண்டு கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று தோகாவில் இருந்து கிளம்பிய விமானம் 16 மணி நேரம் 23 நிமிடத்தில் 14,535 கி.மீ தூரம் பயணித்து இன்று காலை ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த போயிங் ரக விமானமானது 10 நேர மண்டலங்களை கடந்து பயணித்துள்ளது. 4 பைலட்கள் மற்றும் 15 விமானப் பணியாளர்களை கொண்டு பயணித்த இந்த விமானம் ஆக்லாந்தில் தரையிறங்கியதும் தண்ணீர் பீய்ச்சி சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டது. 

டெல்லி  - சான்பிரான்சிஸ்கோ இடையே செல்லும் ஏர் இந்தியா விமானம்தான் அதிக பயண தூரம் கொண்டது. ஆனால், புவியின் மேற்பரப்பு கணக்கீட்டின் படி, தோகா - ஆக்லாந்து இடையே இயக்கப்படும் விமானமானது நீண்ட தூரம் பயணிக்கிறது.