உலகின் மிகச்சிறிய கணினி - ஐ.பி.எம். நிறுவனம் சாதனை!

March 21, 2018

உலகிலேயே மிகச்சிறிய அளவிலாக கணினி  உருவாக்கி ஐ.பி.எம். நிறுவனம் சாதனைப்படைத்துள்ளது. அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் கணினி தயாரிக்கும் நிறுவனமான ஐ.பி.எம். தொழில்நுட்பத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக புதிய கணினியை  உருவாக்கி உள்ளனர். மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் 1 மி.மீ. நீளமும், 1 மி.மீ. அகலமும் கொண்டது. 

இந்த கருவி உப்புக் கல்லை விட மிகச்சிறியது. அதன் தயாரிப்பு விலை மிகக்குறைவாகும். இந்த கணினியை  கண்ணுக்கு தெரியாத அளவிற்கு சிறிய ஆயிரத்திற்கும் அதிகமான டிரான்சிஸ்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

மிகச்சிறிய அளவிலான கம்ப்யூட்டரை இந்தாண்டு நடைபெறும் 'திங்க் 2018' மாநாட்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஐ.பி.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவில் மேற்கொண்டுள்ள பல ஆராய்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

செய்திகள்
செவ்வாய் யூலை 17, 2018

தமிழி எழுத்துரு வரைய சந்தர்ப்பம் கிடைத்து வெளியிட்டோம். இதில் என் பங்கு வரைபட உதவி மட்டுமே.

ஞாயிறு யூலை 01, 2018

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது.