உலகின் மிகப்பெரிய முத்து ரூ.3 கோடிக்கு ஏலம்!

Saturday June 02, 2018

உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார். உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஆற்று நீரில் உருவான இந்த முத்து கேத்தரின் என்பவருக்கு சொந்தமானது. 120 கிராம் எடையும், 7 செ.மீட்டர் நீளமும் கொண்டது. தூங்கும் சிங்கம் போன்ற வடிவிலானது.

இதுமற்ற முத்துகளை விட 3 மடங்கு பெரியது. 18-ம் நூற்றாண்டில் சீனாவில் உள்ள ஆற்றில் விளைந்த முத்து சிப்பியில் உருவானது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார்.