உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ஐதராபாத் தில் இறங்கியது

சனி மே 14, 2016

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியது. ஷம்ஷாபாத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த அந்த விமானத்தை ஏராளமான பயணிகள் பார்த்து ரசித்தனர். ரஷ்ய விமானமான இதில் 640 டன் எடை வரை சரக்குகளைக் கொண்டு செல்ல முடியும். உலகிலேயே மிக நீண்ட இறக்கைகளைக் கொண்ட விமானமும் இதுதான் என்பது முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.