உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டி!

Tuesday November 07, 2017

உலக இளையோர் (யூத்) பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் வருகிற 19-ந் திகதி முதல் 26-ந் திகதி வரை நடக்கிறது.

உலக இளையோர் (யூத்) பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் வருகிற 19-ந் திகதி முதல் 26-ந் திகதி வரை நடக்கிறது. இதில் 39 நாடுகளை சேர்ந்த 193 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 

அடுத்த ஆண்டு (2018) அர்ஜென்டினாவில் நடைபெறும் உலக இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கு இது தகுதி போட்டியாகும். 5 முறை உலக சாம்பியன் மேரிகோம், சர்வதேச குத்துச்சண்டை வீரர் ஷிவதபா, பாடகர் சுபீன் கார்க் ஆகியோர் இந்த போட்டியின் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.