உலக துப்பாக்கி சுடுதல் போட்டி- இந்திய வீராங்கனை வென்றார்!

Friday March 09, 2018

உலககோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அனுஜூம் வெள்ளிப்பதக்கம் வென்றார். இது அவருக்கு முதலாவது சர்வதேச பதக்கம் ஆகும்.

உலககோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி மெக்சிகோவில் உள்ள குடலாஜாராவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசி‌ஷன் பிரிவில் இந்திய வீராங்கணை அனுஜூம் வெள்ளிப்பதக்கம் வென்றார். இது அவருக்கு முதலாவது சர்வதேச பதக்கம் ஆகும்.

இப்போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்கள் பெற்று இருக்கிறது.