உலக புகையிலை எதிர்ப்பு தினம்!

May 31, 2018

புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக புகையிலையை ஒழிக்கும் விதமாக இன்று புகையிலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

உலகின் மிகக்கொடிய நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு மூலக்கராணமாக கருதப்படுவது புகையிலை. இதனால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு கருதுகோளை அடிப்படையாக கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு புகையிலையானது இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருதுகோளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது. 

புகையிலை பாதிப்புகள் குறித்து பேசிய பேராசிரியர் ஆர்.என். ஷரன், எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பிடிப்பதனால் கேன்சர் பாதிப்பு 90-92 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. புகையிலையை எரிக்கும் போது வரும் புகையினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இ-சிகரெட்டில் இருந்து வரும் புகையின் பாதிப்பு மிகவும் குறைவு என கூறினார்.

இதற்கிடையில், ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார்.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி June 01, 2018

நான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்!

வெள்ளி June 01, 2018

மட்டு - அம்பாறை மாவட்டத்தின் எல்லை பகுதியில் வயல்காணிகளிலும் மேட்டுநிலக் காணிகளிலும் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்...