உலக புத்தகமாகும் திருக்குறள்!

Thursday October 25, 2018

 திருக்குறளை, உலகப் புத்தகமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் பேசினார்.சென்னை, எழும்பூரில் உள்ள, தமிழ் வளர்ச்சி வளாகத்தில், உலகத் தமிழ் சங்கத்தின் சார்பில், வி.ஜி.பி.சந்தோஷம் அமைத்த, வள்ளுவர் சிலையை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன், தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில், அமைச்சர், ஜெயக் குமார் பேசியதாவது:திருக்குறளில், அரசர், அமைச்சர், குடிமக்களுக்கான பண்புகள், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த அனைத்து கருத்துகளும் உள்ளன. 

திருக்குறளை முழுமை யாக படித்தவனே, முழு மனிதன்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மூன்று தமிழுடன், கணினித் தமிழ் என்ற, நான்காம் தமிழையும் வளர்த்தார். நான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த போது, தமிழ் இணைய கல்விக்கழகத்தையும், மாநாட்டையும் நடத்தினோம்.

 இவ்வாறு அவர் பேசினார்.தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் பேசியதாவது: வி.ஜி.பி.சந்தோஷம், உலகம் முழுவதும், திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறார். தமிழ் வளர்ச்சி துறையுடன் இணைந்து, 40 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.தமிழ் மொழி, கலை, கலாசாரம், தொல்லியல் துறைகளை, ஒரு குடையின்கீழ் கொண்டுவர, முதல்வர் உதவினார்.

தமிழ் பல்கலையின் வளர்ச்சிக்கு, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர் மையங்கள், பண்பாட்டு மையங்கள், சொற்குவை உள்ளிட்ட, 15 புதிய திட்டங்கள், தமிழ் மொழி யின் வளர்ச்சிக்கு உதவும். திருக்குறளை, உலகப் புத்தகமாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர், விஜய ராகவன், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.