உலக போலீசாக அமெரிக்காவால் இனியும் இருக்க முடியாது- டிரம்ப்

வெள்ளி டிசம்பர் 28, 2018

உலக போலீசாக அமெரிக்காவால் இனியும் இருக்க முடியாது. எல்லா  சுமைகளையும் அமெரிக்காவே சுமக்க வேண்டுமென்பது நியாயமில்லை. உலகில் பெரும்பாலான மக்கள் கேள்விப்படாத நாடுகளில் கூட அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  வெளிப்படையாகவே கூறுகிறேன், இது ஏளனத்துக்குரியது. எந்த வகையிலும் எங்களின் தன்னிகரில்லாத ராணுவத்தை மற்ற நாடுகள் சொந்த  லாபத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்துவதை விரும்பவில்லை. இதற்காக பணமெல்லாம் எங்களுக்கு தர வேண்டியதில்லை. அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு தீவிரவாத சம்பவம் நடந்தால் அதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதற்கான பதிலடி பயங்கரமானதாக இருப்பதுடன் இதுவரை சந்திக்காத இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது அமெரிக்க ராணுவம், போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக 150 நாடுகளில் தனது ராணுவ தளத்தை அமைத்துள்ளது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பை பெற அதற்கான பணத்தை கொடுத்து வருகின்றன. டிரம்ப்பின் திடீர் அறிவிப்பால் அமெரிக்காவை நம்பியுள்ள நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.