உலக வெண்புள்ளி தினம்!

திங்கள் ஜூன் 25, 2018

உலக வெண்புள்ளி தினமானது ஆண்டுதோறும் ஜூன் 25-ம் திகதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

உலக வெண்புள்ளி தினமானது இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 25-ம் திகதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெண்புள்ளி என்பது தொற்றுநோய் அல்ல. ஹார்மோன் குறைபாட்டினால் தோல் தனது நிறத்தை இழந்து விடுகிறது. அதனால் வெண்புள்ளிகள் தோன்றுகின்றன. ஆனால் பலர் இதனை தொற்று நோயாக கருதுகின்றனர். அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூன் 25-ம் திகதி உலக வெண்புள்ளி தினமாக கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் இன்று பாப் இசையின் மன்னர் மைக்கெல் ஜாக்சன் மறைந்த தினம். உலகப்புகழ் பெற்ற பாடகரான மைக்கெல் ஜாக்சன் வெண்புள்ளி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜூன்25-ம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இந்நோய் குறித்த விழிப்புணர்வு இன்றளவும் பொதுமக்களிடம் இல்லாமல் உள்ளது. 

இந்நிலையில், உலக வெண்புள்ளி தினமான இன்று மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட் செய்திருந்தார். அதில், உலகம் முழுவதும் வெண்புள்ளி நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என உறுதிமொழி கொள்வோம். மேலும், யாரையும் அவர்களின் தோல் நிறத்தை கொண்டு வித்தியாசமாக நடத்தக்கூடாது என்பதையும் உறுதி செய்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

வெண்புள்ளி என்பது ஹார்மோன் குறைபாடு என்பதையும், இது தொற்று நோய் அல்ல என்பதையும் உணர்ந்து அனைவரிடமும் சமமாக நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.