உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி!

Monday February 19, 2018

ஆண்டு தோறும் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாலதி கிண்ணத்திற்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 17-02-2018 அன்று கேர்ணிங் (Herning) நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இச்சுற்றுப்போட்டியில் டென்மார்க்கிலுள்ள பல மாலதி தமிழ்க் கலைக்கூடங்களைச் சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட அணியினர் விளையாடினார்கள். இப்போட்டியில் போட்டியிட்ட அனைத்து அணியினரும் மிகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் விளையாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இச்சுற்றுப்போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் பதக்கங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதுடன், முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணியினருக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

இச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அணியினரின் விபரங்கள் வருமாறு:

2008, 2009 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான சுற்றுப்போட்டியில்

மூன்றாவது (3 வது) இடத்தை Herning மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும் இரண்டாவது (2 வது) இடத்தை Grindsted மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், முதலாவது (1 வது) இடத்தை Skjern மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும் தட்டிச்சென்றனர்.

2006, 2007 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான சுற்றுப்போட்டியில்

மூன்றாவது (3 வது) இடத்தை Herning மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும்
இரண்டாவது (2 வது) இடத்தை Helsingør மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், முதலாவது (1 வது) இடத்தை Grindsted மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும் தட்டிச்சென்றனர்.

2004, 2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான சுற்றுப்போட்டியில்

மூன்றாவது (3 வது) இடத்தை Herning மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், இரண்டாவது (2 வது) இடத்தை Grindsted மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், முதலாவது (1 வது) இடத்தை Skjern மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும் தட்டிச்சென்றனர்.

2002, 2003 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான சுற்றுப்போட்டியில்

மூன்றாவது (3 வது) இடத்தை Herning மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், இரண்டாவது (2 வது) இடத்தை Vejle மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், முதலாவது (1 வது) இடத்தை Grindsted மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும் தட்டிச்சென்றனர்.

2000, 2001 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான சுற்றுப்போட்டியில்

மூன்றாவது (3 வது) இடத்தை Skjern மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், இரண்டாவது (2 வது) இடத்தை Herning மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், முதலாவது (1 வது) இடத்தை Grindsted மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும் தட்டிச்சென்றனர்.

1999 ஆம் ஆண்டும் அதற்கு மேற்பட்டவர்களுக்குமான சுற்றுப்போட்டியில்

மூன்றாவது (3 வது) இடத்தை Dreamteam அணியினரும்,
இரண்டாவது (2 வது) இடத்தை Herning B மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும், முதலாவது (1 வது) இடத்தை Herning A மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த அணியினரும் தட்டிச்சென்றனர்.

வெற்றியீட்டிய அனைத்து அணிகளுக்கும் மற்றும் போட்டியில் பங்கு பற்றிய அனைத்து அணிகளுக்கும் எமது வாழ்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்.