ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காக்க விசேட திட்டம்!

May 19, 2017

 ஊட­க­வி­ய­லா­ளர்­களை அவர்கள் எதிர்­கொள்ளும் அச்­சு­றுத்­தல்கள், அழுத்­தங்கள் மற்றும் அநி­யா­யங்­களில் இருந்து பாது­காக்கும் விசேட சட்டப் பிரி­வொன்­றினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உரு­வாக்­கி­யுள்­ளது.
 
 இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் சட்­டத்தின் ஆட்சி தொடர்­பி­லான குழுவின் கீழ் உரு­வாக்­கப்பட்­டுள்ள சிறப்புக் குழுவே ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காக்கும் பொறுப்பை ஏற்­றுள்­ள­தாக இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் செய­லாளர் அமல் ரந்­தெ­னிய தெரி­வித்தார்.

 சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா, உப தலைவர் ஜனாதி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி உள்­ளிட்­டோ­ருடன் சங்­கத்தின் தலை­மை­ ய­கத்தில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அமல் ரந்­தெ­னிய இதனைத் தெரி­வித்தார்.
 
 ஊட­க­வி­ய­லா­ளர்கள் எதிர்நோக்கும் அச்­சு­றுத்­தல்கள், அழுத்­தங்கள் மற்றும் சிக்­கல்கள் தொடர்பில் இல­வச சட்ட ஆலோ­சனை, சட்ட உத­வி­களை எழுத்து மூலமும் வழங்­கவும் தேவை ஏற்­படின் சட்ட நட­வ­டிக்கை தொடர்பில் தமது சங்க சட்­டத்­த­ரணி ஒரு­ வரை இல­வ­ச­மாக மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­க­ப்படும் என அமல் ரந்­தெ­னிய சுட்­டிக்­காட்­டினார்.

 இது தொடர்பில் அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­காரம் ஊட­க­வி­ய­லாளர் என்­பவர் யார் என்­பது தீர்மானிக்கப்படும் எனவும், சட்ட உதவிகளைப் பெற சட்டத்தரணிகள் சங்கத்தில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுக்க முடியும் எனவும் அமல் ரந்தெ னிய சுட்டிக்காட்டினார். 

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.