ஊடகவியலாளர் ,நாட்டுபற்றாளர் சத்திய மூர்த்தியின் நினைவு நிகழ்வு!

February 20, 2018

இன்று(20) மாலை ஊடகவியலாளர் சத்திய மூர்த்தியின் நினைவு நிகழ்வு யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

எழுகலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இவ் நிகழ்விற்கு கவிஞர் கை. சரவணன் தலைமைதாங்கினார். எழு கலை இலக்கிய பேரவையின் தலைவர் எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர செந்தில் நாதன்  சத்திய மூர்த்தியின் ஆளுமை பற்றி உரையாற்றினார்.

ஊடகவியலாளர் இளங்கீரன்  ஊடகப்பயணத்தில் சத்தியமூர்த்தியுடனான தொடர்பு பற்றி விரிவாக உரையா்றினார். ஊடகவியலாளர்  சத்திய மூர்த்தி   இறுதியுத்தத்தின் போது களநிலவரம் பற்றி புலம் பெயர் ஊடகம் ஒன்றிற்கு  தனது குரலில் வழங்கிய நிலவர அறிக்கை  ஒலிபரப்பபட்டது.

யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கே.ரீ கணேசலிங்கத்தின் “காலத்தை பேசுதல்” என்னும் தலைப்பில் ஈழத்தழிழர்களையும்  யூதர்களையும் ஒப்பிட்டு கருத்துரை வழங்கினார்.

மயூரரூபனின் நன்றியுரையுடன்  நிறைவு பெற்றது.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி June 22, 2018

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள