ஊடகவியலாளர், மகனின் விளக்கமறியல் நீடிப்பு!

புதன் ஜூன் 13, 2018

ஊடகவியலாளர் மகேஷ் நிஸ்ஸங்கா மற்றும் அவருடைய மூத்த மகன் ஆகிய இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர். அவ்விருவரும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.