ஊர­டங்கு சட்­டத்தை மீறியவர்கள் விளக்க மறியலில்!

Wednesday March 14, 2018

தெல்­தெ­னிய, திகன பிர­தே­சங்­களில் ஊர­டங்கு சட்­டத்தை மீறி வீதி­களில் நட­மா­டிய 6 பேரை தெல்தெனிய நீதி­மன்ற நீதிவான் எச்.எம். பரீக்­பீன் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்.

தெல்­தெ­னிய,திகன பிர­தே­சங்­களில் ஏற்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து தெல்­தெ­னிய காவல்துறை  பிர­தே­சத்தில் ஊர­டங்குச் சட்டம் அமுல்படுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அவ்­வே­ளையில அதனை மீறி வீதி­களில் நட­மா­டிய 6 நபர்­களை சந்­தே­கத்தின் பேரில்  காவல்துறையினர்  கைது செய்­துள்­ளனர். இவர்கள் திகன, அம்­பாந்­தோட்டை பிர­தே­சத்தைச் சேந்­த­வர்கள் என  தெரி­ய­வந்­துள்­ளது.  காவல்துறை  சந்­தே­க ­ந­பர்­களை  தெல்­தெ­னிய நீதி­மன்ற நீதிவான் எச்.எம்.பரீக்பீன் முன்­னி­லையில் ஆஜர் செய்ததையடுத்தே நீதிவான் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.