ஊர்காவற்துறை கர்ப்பிணித்தாய் கொலை வழக்கு ஒத்திவைப்பு!

Monday April 16, 2018

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கர்ப்பிணித் தாய் மேரி ரம்சிகா படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொலை தொடர்பான விசாரணையில் எதுவித முன்னேற்றமும் இல்லையென தெரிவித்தும் வழக்கை குற்றப்புலானாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்து இரு தரப்பினரும் கோரிய நிலையில் வழக்கு தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 2017 ஜனவரி 24 ஆம் திகதி கர்ப்பிணித் தாயான மேரி ரம்சிக்கா கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.