எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர்!

யூலை 17, 2017

ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநில சட்டசபையில் தனி வாக்குசாவடி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழக எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக சென்னை கோட்டையில் ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஓட்டுச்சாவடி அறைக்கு வெளியில் எப்படி வாக்களிப்பது என்ற விபரம் நோட்டிசாக ஒட்டப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் நபராக சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமி‌ஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். காலை 8.17 மணிக்கெல்லாம் அவர் சென்னை தலைமை செயலகக்துக்கு வந்து விட்டார். 6-வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார்.

ஒட்டுச்சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பணியாற்றினார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் கொறடா சக்கரபாணி பணியாற்றினார்கள். இவ்வாறு முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வாக்களித்து விட்டு வந்ததும் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது. தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது யார் வெற்றி பெறுவார் என்பது உங்களுக்கு தெரிந்து விடும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள்.

செய்திகள்
புதன் யூலை 26, 2017

ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்துவைக்கிறார்.