எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம்!

புதன் டிசம்பர் 26, 2018

எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம் - யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

கடந்த நாட்களாக  எமது தாயகத்தில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ்வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள் . எத்தனையோ மக்கள் ஈர உடுப்புகளால் குளிர்ந்து விறைப்படைந்த நிலையில் உள்ளார்கள் .

குறிப்பாக வடக்கில்   தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்படியாக தவித்துக்கொண்டு இருக்கும் எம் மக்களுக்கு காலத்தின் தேவை கருதி என்றும் எம் மக்களுக்கான பணியை செய்த நாம் இன்றும் உயர்ந்த நோக்கத்துக்கான மக்கள் பணிக்கு மனமுவர்ந்து கடமையுணர்வுடன் செய்யும் பொருளாதார பங்களிப்பு நமது தேசத்தில் துயரில் வாடும் உறவுகளின் துன்பம் நீக்கும் பங்காக அமையும் என்பது திண்ணம்.

கடந்த நாட்களாக யேர்மனியில் உள்ள மனிதநேய அமைப்புகளாலும், செயற்பாட்டாளர்களும், பொதுஅமைப்புகளாலும் , தமிழாலயங்களாலும் மற்றும்  இளையோர்களாலும்  தாயக உறவுகளுக்கு  உதவிக்கு கரம் கொடுக்கப்பட்டதை  நன்றியோடு தெரிவிக்கின்றோம்.

இன்றும் தொடரும் இயற்கை அனர்த்தத்தால் எவ்வித உதவியும் இல்லாமல் எமது உதவிக் கரங்களை நாடி நிற்கும் நம் உறவுகளுக்கு உதவிடுவோம் .தாயக மக்களின் துயர்துடைக்க யேர்மனியில் சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட தொண்டர்நிறுவனத்தின் தகவல் பின்வருமாறு :

Help for smile e.V.
Volksbank Krefeld 
IBAN : DE743206036210349260
BIC : GENODED1HTK     
Stichwort : Flutopfer 2018

தொடர்புகட்கு 
info@helpforsmile.org
http://www.helpforsmile.org
பாதர் Albert Koolen
Albertkoolen@gmx.de