எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும் கூட்டமைப்பு உடையாது!

June 19, 2017

 ‘எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றியளிக்காது’ என,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில், தமிழ்மிரருக்குத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் தொடர்ந்து கூறியதாவது,

“தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் அக்கட்சிகள் வெறுக்கின்றன.

“இந்த முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியில் செல்லும் நிலைப்பாட்டில் புளொட், டெலோ ஆகிய கட்சிகள் இல்லை என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறமுடியும். ஆனால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பற்றி என்னால் தீர்க்கமான முடிவொன்றைக் கூற முடியாது.

“நெருக்குவாரங்கள் என்பன தற்காலிகமானவை. அவற்றைச் சுமூகமாக முடித்துக்கொள்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். இதனைத் தமக்குச் சாதகமாக்கத் துடிக்கும் சிலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறியலாம் எனக் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது” எனவும் சுமந்திரன்  மேலும் தெரிவித்தார்.

செய்திகள்
புதன் ஒக்டோபர் 18, 2017

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சர்ச்சைக்குள்ளான மதுபான தொழிற்சாலை வாயிலை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

நெடுந்தீவில் கடந்த 16 ஆண்டுகளாக கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள நூல் நிலையம், மற்றும் 15 க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் போன்றன உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என பல தடவைகள் கோரிய போதும் இதுவரை அ

புதன் ஒக்டோபர் 18, 2017

ஒரு நாட்டின் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை படைத்தரப்பு நிறைவேற்றவில்லை, புதுக்குடியிருப்பு மண்ணில் மக்கள் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக படை ஆட்சியே நடைபெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.