எந்த ரயிலும் ஓடாது, ரயில்வே சங்கம் அறிவித்தது

Friday August 10, 2018

சிறிலங்காவில் ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக நாளை சனிக்கிழமை  (11) எந்த  ரயிலும் சேவையில் ஈடுபடாது என சிறிலங்கா ரயில்வே பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இன்று (09) சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ரயில்களும் நாளைய தினம் சேவையில் ஈடுபட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.முழுமையாகவே நாளை முதல் ஒரு ரயில் கூட சேவையில் ஈடுபட மாட்டாது என ரயில்வே பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இன்று (09) சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களும் நாளைய தினம் சேவையில் ஈடுபட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையோ அல்லது தீர்வோ கிடைக்காத காரணத்தால் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தையோ அல்லது தீர்வோ கிடைக்காத காரணத்தால் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.