எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் மைத்திரியே பொறுப்பு!

வியாழன் டிசம்பர் 06, 2018

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். 

ரிஷாத் பதியூதினை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார வௌியிட்ட குரல் பதிவு அதொடர்பில் அண்மையில் அகில இலங்கை மக்கள் சார்பில் காவல் துறை    தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ரிஷாத் பதியுதீன் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். 

தன்னை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் செய்தி வௌியாகியுள்ள நிலையிலும் தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். 

தற்போது பாதுாகப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருப்பதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று ரிஷாத் பதியுதீன் இதன்போது கூறினார்.