என்னடா நடக்குது நாட்டுல - சமுத்திரகனி

நவம்பர் 17, 2017

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `மதுர வீரன்' படத்தில் இருந்து `என்னடா நடக்குது நாட்டுல' என்ற வரிகளில் முதல் பாடல் வெளியாக இருக்கிறது.

‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘மதுர வீரன்’.  வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார். 

சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், படத்தில் இருந்து ஒரு சிங்கிள் ஒன்று நாளை மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. `என்னடா நடக்குது நாட்டுல' எனத் தொடங்கும் அந்த பாடலை இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி வெளியிடுகிறார். 

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.