என்னையும் மைத்திரியையும் பிரிப்பதால் யாருக்கு என்ன இலாபம்?

Wednesday December 13, 2017

“தன்னையும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரிப்பதால் யாருக்கும் இலாபம் கிடைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று(12) தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். “எம்மைப் பிரிப்பதில் எவ்வித சூழ்ச்சியும் இல்லை.சுயாதீனமாக செயற்பட யாருக்கும் உரிமையுள்ளது.என்னையும்,ஜனாதிபதியையும் பிரிப்பதால் அவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகின்றது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்த அரசாங்கம் கடந்த 3 வருடங்களுக்குள் என்ன செய்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.பொருளாதாரம் விழ்ச்சியடைந்துள்ளது.வாழ்வாதாரம் அதிகரித்துள்ளதுடன், வேலையற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இதனுடன் தொடர்புடையவர்களுடன் நாம் உடன்படிக்கை செய்தால் நாமும் அதில் பங்குதாரர் ஆக வேண்டிவரும்.என​வே இந்த அழிவுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே பொறுப்புக் கூற வேண்டும்” என்றார்.