எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதி விபத்து .

புதன் ஓகஸ்ட் 03, 2016

இந்தியா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது.

இன்று  காலை  10.50 மணியளவில் துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எமிரெட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் தீ பிடித்ததில் அதன் வால் பகுதி முற்றிலும் எரிந்துவிட்டது.

கடினமான நிலையிலே விமானம் தரையிறங்கியது, தரையிறங்கியதும் விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியது என்று விமானத்தில் இருந்தவர் கூறினார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

282 பயணிகளும்  18 விமான  பணியலர்கும்  பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில்  224 இந்திய குடி மக்களும் , 24 பிரித்தானியர் களும்  11 அரபியர்களும்  பயணம்  செய்துள்ளனர்.