எம்தலைவன் உன்னை தங்களது   வழிகாட்டியாய்  தாங்கிக்கொள்கிறார்கள் !

சனி நவம்பர் 17, 2018

கரிகாலனே உன்னையும் 
உனது சேனையையும் 
அழிக்கவந்தஇந்திய 
அமைதிப்படையில்
அரைவாசியினர்
சீக்கியர்கள் 
என்னவெல்லாம் 
அட்டூழியங்களை 
செய்தார்கள் - எம்
 மண்ணில் 
இன்று தமது தேச 
விடுதலைக்காய் 
எம்தலைவன் உன்னை
தங்களது   வழிகாட்டியாய் 
தாங்கிக்கொள்கிறார்கள் 
பஞ்சாப் மக்களிடம் 
உள்ள எழுச்சி இன்று
நம்மிடம் இல்லாதது ஏனோ?
எம்மிடமோ நாளுக்கு 
ஒவ்வொரு  காகித தலைவர்கள் 
உருவெடுத்துக் கொள்கிறார்கள்..
கரிகாலனே! - உன்
கண் அசைவில் 
இதுவும் ஒன்றா?
மலரட்டும் தமிழீழம் 
வெல்லட்டும் ஜிந்தாபாத் 

றொப்