எம் இன மங்கையர்கோர் மகுடம் சூட்டினாய்!

Thursday October 04, 2018

மாலதி அக்கா!  
மணக்கோலம்  கொண்டு 
மணமேடை ஏறி
 மாங்கல்யம் 
உன்கழுத்தில் 
அணிய வேண்டியநீ 
எம் மறவர் அணியில் 
இணைந்து கழுத்தில் 
நஞ்சணிந்து 
களமாடி
சாவை அணைத்து
எம் இன மங்கையர்கோர் 
மகுடம் சூட்டினாய் 
வீர மறத்தி நீ
மறப்போமா உன்னை 
வரலாற்றில்
நான் படித்த வேலு நாச்சியாரின் 
வீரத்தை உன்னில் 
நாம்கண்டோம் 
வீரவணக்கம் 

 றொப்