எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகள்!

Saturday July 07, 2018

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து டென்மார்க்கில் நடைபெற்ற வணக்க நிகழ்வு

 இந்த உலகில் வாழும் மனிதன் ஒவ்வொருவனும் எல்லாவற்றுக்கும் மேலாக தன்னையே காதலிக்கின்றான். தனது உயிரேயே நேசிக்கின்றான். உயிர் வாழ வேண்டுமென்று துடிக்கின்றான். மனிதன் உயிரை நேசிப்பதால், உயிர் வாழ விரும்புவதால், உயிர் அற்று போகும் சாவு என்ற இல்லாமை நிலைக்கு பயப்படுகிறான். இது மனித இயல்பு. இயற்கையின் நியதி.

ஆனால் ஒரு கரும்புலி வீரன் தன்னை விட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரை விட தான் வரித்துக்கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்தக் குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். 

அந்த குறிக்கோள் அவனது சுயத்திற்கு அப்பால் நிற்கும் மற்றவரின் நலன் பற்றியது, நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள். இவர்களின் நினைவாக டென்மார்கில் நடைபெற்ற வணக்க நிகழ்வு.