எல்லைதாண்டி மீன் பிடித்த மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

யூலை 17, 2017

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  இதில் ஒரு படகில் சென்ற 4 மீனவர்கள் இன்று (17)  காலை இலங்கை கடல் பரப்புக்கு உட்பட்ட கோவிலன் கடல் பகுதியின் வடகிழக்கே 9 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு ரோந்து வந்த  சிறிலங்கா கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 மீனவர்களையும் நாட்டுப்படகுடன் சிறைபிடித்தனர்.  பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.  இவர்கள் இன்றையதினம் யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

எதிர்வரும் 31 ஆம் வரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.றியாஸ் உத்தரபிறப்பித்ததாக யாழ் மாவட்ட நீரியல் வள உதவி பணிப்பாளர் ஐ.சுதாகர் தெரிவித்தார். 

மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த ஜெகதாப்பட்டினம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள்  சிறிலங்கா கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு  சிறிலங்கா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மீன்பிடிக்க நீண்டதூரம் செல்வதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது மீன்வளத் துறையிடம் பதிவு செய்து விட்டு செல்வார்கள். நேற்று முன் தினம் இரவுதான் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பினர். 

இன்று காலை அவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் குறிப்பிட்ட தூரம் வரை மட்டும் செல்வதால் மீன்வளத்துறையிடம் பதிவு செய்வதில்லை. 

நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்களில் 4 பேர் எல்லை தெரியாததன் காரணமாக இலங்கை கடற்பகுதியில் நுழைந்ததால் கடற்படையினரால் சிறைபிடிக்கபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்
திங்கள் January 22, 2018

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய சாமுவேல் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மே