எல்லை நிர்ணய அறிக்கை அமுல்படுத்துவதில் தாமதம்!

யூலை 11, 2018

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு "பெப்ரல்" அவதானம் செலுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அந்த அமைப்பு இதுத் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அசமந்தபோக்கு தெரிகிறது.

இது நாட்டின் இறையாண்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் அவதூறிழைக்கும் செயற்பாடாகும். எனவே நாடாளுமன்றத்தின் பிரதானி என்ற வகையில் சில விடயங்கள் குறித்து நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்
திங்கள் யூலை 23, 2018

 பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,