எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்

Monday October 22, 2018

தமிழீழப் போராட்டவரலாற்றில் பலபுரட்சிகரமானதிருப்பங்களைஏற்படுத்திய தமிழீழ விடுதலையின்  தடை அகற்றிகளினதும்,தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும்,முதற்;களப் பலியானபெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களினதும்;;; நினைவுகள் சுமந்தஎழுச்சிவணக்கநிகழ்வானதுசுவிஸ் பேர்ண்மாநிலத்தில் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்தியவல்லாதிக்கத்திற்கெதிராகஅகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள், சிறிலங்காஅரசின் சதியால்  படுகொலை செய்யப்பட்டலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகியோரோடு  தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப். பரமதேவா அவர்களினதும்,விடுதலைப் புலிகளின் மத்தியகுழுஉறுப்பினர்லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்மற்றும் முதற்;களப் பலியானபெண் மாவீரர் 2ம் லெப்மாலதிஉட்பட்டஐந்துமாவீரர்களின் நினைவுகள் சுமந்ததுமானஇவ்வெழுச்சிநிகழ்வில் நூற்றுக்கணக்கானமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், சுடர்வணக்கம,; மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் தமிழ்த்தாய் இசைக்குழுவினரோடுஇளம்இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

தாய்நாட்டின் விடுதலையோடுபெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்தியவல்லாதிக்கத்திற்கெதிராகவீரப்பெண்ணாகவிடுதலைக்காய் வீறுகொண்டெழுந்துவித்தாகிவீழ்ந்த 2ம் லெப் மாலதிஅவர்களின்  நினைவுநாளானதுதமிழீழப் பெண்கள் எழுச்சிநாளாகநினைவுகூரப்பட்டுகடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.

மாவீரவித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்கநிகழ்வின்எழுச்சிநிகழ்வுகளாகஎழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சிநடனங்கள், கவி வணக்கங்களோடுநினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாகநம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன. 

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு