எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ் - 01.10.2017

ஒக்டோபர் 02, 2017

 சுவிசில் உணர்வெழுச்சியுடன்சிறப்பாகநடைபெற்ற தமிழீழவிடுதலையின் தடைஅகற்றிகளினதும், ஈகைப்பேரொளிசெந்தில்குமரன் அவர்களின் நினைவாக  அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

தமிழீழப் போராட்டவரலாற்றில் பலபுரட்சிகரமானதிருப்பங்களைஏற்படுத்தியதமிழீழவிடுதலையின் தடைஅகற்றிகளினதும்,தன்னினத்தின் துயர்துடைக்கதன்னுடலைதீயில் கருக்கிஉலகின் மௌனம் கலைக்;கத் துணிந்தஈகைப்பேரொளிசெந்தில்குமரன் அவர்களின் நினைவாகஅனைத்துஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்தவணக்கநிகழ்வானதுசுவிஸ் வலேமாநிலத்தில் 01.10.2017ஞாயிற்றுக்கிழமைமிகவும் உணர்வெழுச்சியுடன்நடைபெற்றது. 

இந்தியவல்லாதிக்கத்திற்கெதிராகஅகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்படபன்னிருவேங்கைகள்,சிறிலங்காஅரசின் சதியால்  படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகியோரோடு தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் களப்பலியான மாவீரர் லெப். பரமதேவாஅவர்களினதும், விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர்லெப். கேணல்   சந்தோசம் மாஸ்ரர்அவர்களினதும்;,அனைத்து ஈகையர்களின் நினைவுகள் சுமந்ததுமான  இவ்வெழுச்சி நிகழ்வில் பலநூற்றுக்கணக்கானமக்கள் கலந்துகொண்டமையானதுஎழுச்சியுடன்,மிகவும் உணர்வுபூர்வமாகவும்,நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்கநிகழ்வில்பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத்தொடர்ந்து மலர்மாலைஅணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள்ஏற்றப்பட்டுஅகவணக்கம்,சுடர்வணக்கம,;மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலிசெலுத்தப்பட்டசமவேளையில் இளம் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க  நிகழ்வின்எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள்,கவியரங்கம், இளையோர்களின்பேச்சுக்கள், எழுச்சி நடனங்களோடு, காலத்திற்கேற்பகருப்பொருளைகொண்டஎழுச்சியுரைகளும்,நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன்  நிறைவு பெற்றன. 

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி February 09, 2018

சிறீலங்காவின் 70 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப் பட்ட ஒன்று கூடலில் பங்குபற்றிய மக்களை பார்து சிறீலங்கா தூதரகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத